• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தேர்தல் பிரச்சாரத்தில் திடிரென சந்தித்துக் கொண்ட பாஜக, அதிமுக வேட்பாளர்கள்.

கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலிலும் கடுமையான வாக்கு வேட்டையில் பரபரத்துக் கொண்டு இருக்கும் போது ஏதாவது ஒரு அதிசயமும் எங்காவது நடை பெற்று வாக்காளர்கள் மத்தியில் பேசும் பொருளாகும். அது போன்று ஒரு நிகழ்வு இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது.

பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து கொண்டு இருந்த போது, அந்த வழியாக வந்து கொண்டிருந்த அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேயன், பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் அருகே வந்து வணக்கம் தெரிவித்ததும், இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொண்டே ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்து கொண்டும், கை குலுக்கி சென்றார்கள்.