• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வைரலாகும் ஷங்கரின் ‘ராம் சரண் 15’ படப்பிடிப்புத்தளப் புகைப்படங்கள்

Byமதி

Nov 6, 2021

இயக்குநர் ஷங்கர் தற்போது ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கி வருகிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். 170 கோடியில் இப்படம் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 22 ஆம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கியது.

கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனால், நடிகர் ராம் சரண் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இல்லத்திற்கு வந்து நேரடியாக ஆறுதல் கூறினார். இந்த நிலையில், தற்போது ‘ராம் சரண் 15’ படப்பிடிப்புத்தளப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் ரயில்வே ட்ராக்கில் புன்னகையுடன் இருக்கும் புகைப்படங்களும் ராம் சரண் உள்ளிட்ட படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.