• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

“அடங்கா பிடாரியான அமலாக்க துறையை” – கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி

ByG.Suresh

Mar 22, 2024

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது இரண்டாவது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலை, பாஜக அரசு தனது கைப்பாவையான அமலாக்க துறையின் மூலம் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிப்பதாகவும், தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர்களை முடக்குவதற்காக அமுலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் தலைவரை செயல்படாமல் செய்வதற்காக, வங்கி கணக்கு முடுக்கப்பட்டது என்றவர் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும், அடங்காப்பிடாரியான தமிழாக்க துறையை நீதிமன்றம் தான் கண்டிக்க வேண்டும் என தெரிவித்தார். ஆவணங்கள் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எதிர்க்கட்சியினராக இருந்தால் சட்டப்படியான நடவடிக்கையும், கூட்டணி வைத்துக் கொண்டாலும், தன் கட்சியில் இணைந்து கொண்டாலும் அவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. மக்கள் இந்த சர்வாதிகார பொக்கை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதற்கு சரியான முடிவு கட்டுவார்கள் என்றார். உச்ச நீதிமன்றம் தலையில் கொட்டுவதற்கு முன்னர் ஆளுநர் அமைச்சர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்திருக்க வேண்டும். ஜனாதிபதி ஆளுநர் ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 2ஜி வழக்கில் கிழமை நீதிமன்றத்தில் வெற்றி பெற்றது போல உயர் நீதிமன்றத்திலும் வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கை உள்ளதாகவும், தமிழக அரசின் திட்டங்கள் சொட்டுநீர் பாசனம் போல நேரடியாக வேருக்குச் செல்கிறது. மேலும் தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுத்தாள் இத்திட்டத்தை முதல்வர் விரிவுபடுத்துவார். திமுக தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி எடுத்து அதன் மூலம் மறைமுகமாக திமுகவை பாராட்டுகிறது. இதற்காக அதிமுகவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு அதிகமாக இருக்கும். தமிழிசை சௌந்தர்ராஜன், அண்ணாமலை இருவரும் இதுவரை ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றது கிடையாது. அவர்களுக்கு ஊடகங்கள் பூதக்கண்ணாடி வைத்து பிரச்சாரம் செய்கின்றனர். இந்தியா கூட்டணி பார்ட்டி லவ் (40 – 0 ) என்ற செட் கணத்தில வெற்றி பெறும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் எம்பி யாக டெல்லிக்கு செல்வார்கள் மற்றவர்கள் வீட்டுக்கு செல்வார்கள் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.