• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ByI.Sekar

Mar 21, 2024
தேனி மாவட்டம் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.டி .நாராயணசாமியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அவரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்பு, தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த  வி.டி .நாராயணசாமி மாவட்டத்தின் நுழைவாயிலான ஆண்டிபட்டிக்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன்,கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


அதனை தொடர்ந்து தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர், மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி.கே ஜக்கையன் மற்றும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர் நாராயணசாமி வைகை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சியினரின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து சிறிது தூரம் ஊர்வலமாக சென்று கட்சியினருடன் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சுமதி வடிவேல், கணேசன் ,நிர்வாகிகள் வெள்ளை பாண்டி, பொன் முருகன் ,ராமச்சந்திரன், கவிராஜன், மாரியப்பன், மதியரசன், பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன், வீரக்குமார், ரத்தினபாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.