• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் விருப்பமனு அளித்தனர்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளருமான விஜய் வசந்த் மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்பமனு அளித்தனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனு அளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது இன்று மதியம் ஒரு மணியுடன் விருப்பமனு பெறுதல் நிறைவு பெற இருப்பதால் இன்று காலை முதலே ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு விருப்பமான தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனுக்களை கொடுத்து வருகின்றனர்

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் டி செல்வத்திடம் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங், நாகர்கோவில் மாநகர தலைவர் நவீன் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பட், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சோனி விதுலா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார்,வட்டார தலைவர் ரவிசங்கர்,டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாவட்ட மாநில நிர்வாகிகள் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து இன்று விருப்பமனு அளித்தனர்