• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே, கோயில் தேர் மராமத்து பணி தொடக்கம்

ByN.Ravi

Mar 18, 2024

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு தேரை தயார் செய்யும் பணி இன்று முதல் தொடங்கியது.
அறுபடை வீடுகளில், முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 24-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழாவும் பௌர்ணமி சிறப்பு பூஜையும் நடைபெற்றும், 26-ஆம் தேதி இரவு 7 மணிக்கு சூரசம்காரம் லீலை 27-ம் தேதி இரவு 7 மணிக்கு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடைபெறும்.
தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 28- ம் தேதி மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியாவிடை முன்னிலையில் முருகப்பெருமான் தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
இந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியாக 29-ஆம் தேதி பெரிய தேரோட்டம் நடைபெறும். இதற்காக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள பெரிய தேரினை சுத்தம் செய்து தயார் படுத்தும் பணி முதல் தொடங்கியது.