• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை புதியதாக அமையவுள்ள பாலத்திற்கு மேல் உயர்த்தி அமைக்க கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Byகுமார்

Mar 16, 2024

மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனையின் சார்பில் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை புதியதாக அமையவுள்ள பாலத்திற்கு மேல் உயர்த்தி அமைக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை செல்லூரில் உள்ள தேவர் சிலை முன்பு நேதாஜி சுபாஷ் சேனையின் சார்பில் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை புதியதாக அமையவுள்ள பாலத்திற்கு மேல் உயர்த்தி அமைக்க கோரி
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் Dr.மகாராஜன் அவர்களின் ஆணைக்கினங்க மாநில செயலாளர் சுமன்தேவர் அவர்களின் தலைமையிலும் மருது தேசிய கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன், அனைத்து அகமுடையார் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் முன்னிலையிலும், மாநில இளைஞரணி செயலாளர் குமார்பாண்டியன், மாநில வர்த்தக அணி செயலாளர் செந்தூர்மகேஷ் இளைஞர் அணி நிர்மல் குமார் மதுரை மாவட்ட செயலாளர் கார்த்திக், பாலா, பொருளாளர் களஞ்சியம்முருகன்,விஜய் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ராஜ்குமார் சுமன் கார்த்திக் கூட்டாக கூறியது தென் தமிழகத்தின் அடையாளமாக விளங்கக்கூடிய கோரிப்பாளையம் தேவர் சிலையும் உயரத்தை புதிதாக அமைக்கக்கூடிய பாலத்தின் உயரத்திற்கு உயர்த்த வேண்டும் அல்லது சிலையின் பீடத்தை உயர்த்தி கட்ட வேண்டும். சிலையை உயர்த்த முடியவில்லை என்றால் பாலத்தின் வேலைகளை கைவிட வேண்டும். தொடர்ந்து தேவரினத்தின் அடையாளத்தினையும்தேவரின மக்களின் கோரிக்கையையும் அழிக்க நினைக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை செய்யத் தவறினால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்த தயாராக உள்ளோம் என கூறினார்.