• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராதிகாசரத்குமார்

Byவிஷா

Mar 13, 2024

வருகிற மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், கனிமொழிக்கு எதிராக பாஜக சார்பில் ராதிகாசரத்குமாரை களம் இறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகளில் பாஜக சார்பில் நடிகர் சரத்குமார் போட்டியிடக்கூடும் என்று பேசப்பட்டு வருகின்ற சூழலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழியை எதிர்த்து ஒரு பலமான மற்றும் அவருக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் விதமாக ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என பாஜக தலைமை விரும்புகிறதாம். அதனால் பாஜக சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழியை எதிர்த்து ராதிகா சரத்குமாரை களம் இறக்கும் முடிவில் பாஜக இருக்கிறதாம்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை நாடார், தேவர், தேவேந்திரகுல வேளாளர், நாயுடு சமுதாய வாக்குகளே பெரும்பான்மையாக உள்ளது. இவை அனைத்துமே பாஜகவிடம் பக்காவாக இருப்பதால் கனிமொழிக்கு தூத்துக்குடியில் கடுமையான போட்டியை கொடுத்து, அவரை தோல்வியுற செய்யக்கூடிய அளவிற்கு களம் அமையலாம். ஆகவே, அதற்கு தகுந்த வேட்பாளராக ராதிகா சரத்குமார் இருக்கலாம் என்று கருதுகின்றது பாஜக.