• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மார்ச் 8ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

Byவிஷா

Mar 1, 2024

மார்ச் 8ஆம் தேதி மஹாசிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
வரும் மார்ச் 8 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள், செலவாணி முறிச் சட்டம் 1881-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலகங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.