• Tue. Feb 11th, 2025

இறச்சகுளத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி, குமரி மாவட்டம் மார்ச் மாதம் முழுவதும் தினம் ஒரு இடத்தில் ஆர்பாட்டம்

குமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மார்ச் திங்கள் 1_ம் தேதி முதல் 31_ம் தேதி வரை தினசரி மாலை தேர்ந்தெடுக்கப்பட்ட சாலை சந்திப்பில் ஆர்பட்டம் என தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவன தலைவர் தினகரன் அறிவிப்பினை தொடர்ந்து நேற்று (மார்ச்_1)ம் தேதி மாலை அம்பேத்கர் சிலை நிறுவ இருக்கும் பகுதியான இறச்சகுளத்தில்,மாநில செயலாளர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களும் திரளாக பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடு பட்டிருந்தனர். போராட்டம் குறித்து நிறுவன தலைவர் தினகரனிடம் பேசிய போது.
இந்திய ஜனநாயகம் அனுமதித்து இருக்கும் போராட்ட உரிமை. டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை இந்தியாவே திரும்பி பார்பது போல், குமரி மாவட்டத்தில் ஒரு மாதம் ஆர்பாட்டம் என அறிவித்துள்ள நிலையில், இதில் வெற்றி கிட்டும் வரை எங்கள் போராட்டம் தீராது என தெரிவித்தார்.