சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் பகுதிகளில், சிஎம்.துரை ஆனந்த் தலைமையில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
திமுக தலைவர் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் கே ஆர் பெரிய கருப்பன் அறிவுறுத்தலின்படி, சிவகங்கை சட்டமன்ற பொறுப்பாளர் அண்ணன் முருகவேல் நுஒ ஆடுயு கழக மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் மேற்பார்வையில் நகர் மன்ற தலைவர் சிஎம்.துரை ஆனந்த் தலைமையில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்னும் முன்னெடுப்பின் கீழ் இன்று சிவகங்கை நகர் பகுதியில் பாகம் எண் 107முதல் 116 வரை உள்ள பகுதிகளான மதுரை முக்கு, காந்தி வீதி, கோர்ட்டு வாசல், சந்தைகடை, திருப்பத்தூர் ரோடு பகுதிகளில் வீடு மற்றும் கடைபகுதிகளுக்கு சென்று திண்ணை பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பாக பொறுப்பாளர்கள் ஜெயகாந்தன்,விஜயகுமார்,சதிஸ்குமார் மற்றும் நகர் மன்ற து.தலைவர் கார்கண்ணன், மாவட்ட மகளிர் அணி து.அமைப்பாளர் மற்றும் அரசனூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணிஅய்யப்பன், மற்றும் கழக பேச்சாளர் தமிழ்பிரியாவேங்கைபிரபாகரன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜபாண்டி, விஜயகுமார், செந்தில்வேல் பாண்டி, ராமதாஸ், ஆயுப்கான், சிஎல். சரவணன், மதியழகன், கார்த்திகேயன் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் ராஜா சர்புதீன், ஆர் டி. சேகர், சேது, சண்முகம், சேகர், காட்டு ராஜா, மகளிர் அணி ஜெயந்தி, இந்திரா மற்றும் நகர் கழக நிர்வாகிகள் மற்றும் பகுதி சார்ந்த அனைத்து பாக முகவர்கள் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)