• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காளையார்கோவில், மறவமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கு தேவையான தொகுப்பை வழங்கினர்

ByG.Suresh

Feb 28, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் மு க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் கே ஆர். பெரியகருப்பன் மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் தென்னவன் வழிகாட்டுதலோடு காளையார் கோவில் தெற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றியதிற்கு உட்பட்ட மறவமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கு தேவையான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், ஃபைல் உள்ளிட்ட தொகுப்பு வழங்கும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழச்சிக்கு தலைமை வகித்த காளையார் கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் யோக கிருஷ்ணகுமார் 100க்கும் மேற்பட்ட தொகுப்புகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய பின்பு பேசுகையில் நடைபெறவிருக்கும் பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மாவட்ட கழகம் ஒன்றிய கழகம் இணைந்து வழங்கப்படும் என்றும் அறிவித்து பேசினார். இதே போல் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தோப்பூர் வழங்குவதாக கூறினார். நிகழ்ச்சியில் மறவமங்கலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முத்து துரை, திமுக நிர்வாகிகள் கருணாநிதி, ஐயப்பன், ஒன்றிய துணை செயலாளர் கோதண்டபாணி, ஜோதி ராமலிங்கம், துரைராஜ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், ஹக்கீம், மோகன், அண்ணாமலை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியில் திமுக மூத்த முன்னோடிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பொது தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்குபரிட்சை எழுதுவதற்கு தேவையான தொகுப்பு வழங்கப்பட்டது.