• Thu. Mar 27th, 2025

சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை சார்பில், அம்மா பிறந்த நாளை முன்னிட்டு, பார்வையற்றோர் குழந்தைகளுக்கு மதிய உணவளித்து இனிப்புகள் வழங்கினார்.

ByG.Suresh

Feb 27, 2024

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை முன்னாள் முதல்வர் எடப்பாடியாரின் உத்தரவின் பேரில் தமிழக முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் MLA தலைமையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அம்மா பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை சார்பில் புரட்சி தலைவி ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை அம்பேத்கார் சிலை அருகே உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் பயின்று வரும் குழந்தைகளுக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இரா.இளங்கோவன் BA ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் BA, தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி ,வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமிK. அழகர் பாண்டி அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட துணை செயலாளர் M. அன்பு மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் புதுப்பட்டி செந்தில்குமார் சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் சீரம்பட்டி முனியாண்டி, சந்தானம் 19 நகர வட்ட செயலாளர் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.