• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டி வையம்பட்டி ஸ்ரீ வையம்மாள் சடச்சியம்மாள் கோவில் மகா கும்பாபிஷேகம் 300 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது:

ByN.Ravi

Feb 26, 2024

காரியாபட்டி அருகே, வையம்மாள், சடச்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வையம் பட்டியில் மிகவும் பழைமையான பிரசித்த பெற்ற வையம்மாள் கோவில் அமைந்துள்ளது. கிராம மக்களின் காவல் தெய்வமாக இருக்கும் வையம்மாள் குழந்தை வடிவத்தில் தோன்றிய தெய்வமாகும். . ஊருக்கு பக்கத்தில் கண்மாய் கரையில் வையம்மாள் சுவாமி கூரையில்லாத இடத்தில் தான், இதுவரை மக்கள் வணங்கி வந்தனர்.

அதன் பிறகு கிராம மக்கள் ஒன்றினைந்து புதிதாக திருப்பணிகள் செய்து வையம்மாள் மற்றும் சடச்சியம்மனுக்கு தனியாக ஆலயத்தை கட்டியுள்ளனர். |கட்டப்பட்ட கோவில் மகா கும்பாபிஷேகம்பிறகு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மங்கள இசை யுடன் விக்னேஸ்வர பூசை வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு, யாகசாலை துவங்கப்பட்டது. இன்று 26ந்தேதி காலை 7 மணிக்கு 2ம் யாகசாலை பூஜை, மண்டப சாந்தி பூஜை ஜெப பாராயணம் மற்றும் மகாபூர்ணா ஹுதி முடிந்தவுடன் புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசங் களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது .. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைவருக்கும் அன்னதானம். வழங்கப் பட்டது. விழா ஏற்பாடுகளை, வையம்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.