

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேசன் சார்பாக, கணக்க னேந்தல் நாகத்தம்மன் புத்துக் கோவிலில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் லட்சுமண சுவாமிகள் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை, தொடங்கி வைத்தார். கோவில் வளாகத்தில் தேவையான அரசமரம், வேம்பு, மாமரம் , போன்ற மரங்கள் நடப்பட்டது. கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம், புதுப்பட்டி அரசு மேல்
நிலைப்பள்ளி ஆசிரியர்கள் குருசாமி, ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

