• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவை லங்கா கார்னர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு, பார் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

BySeenu

Feb 23, 2024

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பகுதியில் ஆயில் நிறுவனங்கள் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது., இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் குடி போதையில் அங்குள்ள குடியிருப்பு வாசிகள், ஆயில் கடை பெண் ஊழியர்களிடம் அடிக்கடி தகாறு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு டாஸ்மாக் கடைக்கு குடிக்க வந்த சிலர் அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர்.

மேலும் இன்று காலையும் சிலர் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் மற்றும் ஆயில் கடை உரிமையாள்ர்கள், ஊழியர்கள் டாஸ்மாக் கடைக்குள் சென்று அங்கிருந்த டாஸ்மாக் பார் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.