• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மக்களவைத் தேர்தலில் மகனை ஓரங்கட்டும் தந்தை

Byவிஷா

Feb 23, 2024

வருகின்ற மக்களவைத் தேர்தலில், தேனி மக்களவைத் தொகுதியில், தன்னுடைய மகன் ஓ.ப.ரவீந்திரநாத்தை ஓரங்கட்டி விட்டு, தந்தையான ஓ.பன்னீர்செல்வம் தாமரைச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக ஒரு யோசனையை கூறியுள்ளது. அதாவது, தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பதில் ஓ.பன்னீர்செல்வமே நேரடியாக போட்டியிட்டால், களம் நன்றாக இருக்கும் எனக் கருதும் பாஜக மேலிடம், அதற்கான காய் நகர்த்தல் வேலையில் இறங்கியுள்ளது. தனது தரப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்றால் கையில் அதிகாரப் பதவி இருக்க வேண்டும் என எண்ணுவதாகவும், இதனையறிந்து தான் பாஜக ஓ.பன்னீசெல்வத்தை தாமரைச் சின்னத்தில் களமிறக்க காய் நகர்த்துவதாகவும் தெரிகிறது. அப்போ ஓ.பி.ரவீந்திரநாத் நிலைமை என்னவாகும் என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களே விடை தெரியாமல் குழம்பிப் போய் காணப்படுகிறார்கள்.