• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்டத்தில் மற்றொரு தேவலாயத்திலும் பாதிரியார் அடித்து ஒருவர் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி மரணம்.

குமரி மாவட்டத்தில் மைலோடு பகுதியில் தேவாலய அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளரும்,அரசு போக்குவரத்து பணியாளர் அண்மையில் பாதிரியார் மற்றும் தி மு க வை சேர்ந்த இருவர் உட்பட 15_பேர் மீது வழக்கு பதிய பட்டு, பாதிரியார் மற்றும் 4_ங்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நாகர்கோவிலில் மேலபெருவிளையில் உள்ள ஜெபமாலை மாத ஆலய பங்கு பேரவையின் மற்றொரு பாதிரியார். பங்கு பேரவையின் உறுப்பினர் ஆல்வின் அருள்தாஸ் என்ற நபரை பாதிரியார் தாக்கியதில் காயமடைந்த நிலையில், நாகர்கோவிலில் உள்ள முத்து நியூரோ தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கடந்த 10 நாட்களாக மருத்துவம் மனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி ஆல்வின் அருள்தாஸ் இன்று மரணம் அடைந்தார்.

மேலபெருவிளை ஜெபமாலை மாத ஆலயம் பாதிரியார் தாக்குதலால் தான் ஆல்வின் அருள்தாஸ் யின் உறவினர்கள்.ஆல்வின் அருள்தாஸ் சிகிச்சை பெற்ற மருத்துவம் மனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறையினர் மருத்துவ மனை நிர்வாகம் மற்றும் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.