• Thu. Mar 27th, 2025

குமரி மாவட்டத்தில் தவக்காலம் தொடங்கியது

கிறித்துவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலத்தை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் துவங்கி உள்ளனர். அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி வழிபாட்டில் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டு நெற்றியில் சாம்பல் பூசி தவ காலத்தை தொடங்கினார்கள். –
இயேசு உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் இந்த தவக்காலத்தினை நோன்பு இருந்து அனுசரிக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் மார்ச் மாதம் மாதம் 31 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடபட இருக்கும் நிலையில் 40 நாட்கள் முன்னதாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை தொடங்கினார்கள். சாம்பல் தினமான தொடங்கும் இந்த தவக்கால நிகழ்சிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலங்களில் இன்று காலை திருப்பலியுடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க பேராலயமான நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி வழிபாடு நடைபெற்றது. கோட்டாறு மறைமாவட்ட பேராயர், முனைவர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு நெற்றியில் சாம்பல் பூசி தவ காலத்தை தொடங்கினார்கள். ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர். – உக்ரெனில் அமைதி திரும்ப இந்த தவக்கால பிரார்த்தனை – கோட்டார் மறை மாவட்ட பேராயர் முனைவர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலியில் நடை பெற்றது.