• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தி.மு.க., வட்ட செயலாளருக்கு கத்தி குத்து – பகுதி செயலாளர் மீது புகார்…

Byமதி

Oct 31, 2021

திருச்சி திருவன்னைகாவலை சேர்ந்தவர் கண்ணன். தி.மு.க.வின் வட்ட செயலாளரான இவரது வீட்டுக்கு நேற்று இரவு சென்ற நான்கு பேர் பகுதி செயலாளர் ராம்குமார் அழைக்கிறார் என்று அழைத்து வீட்டின் வாசலில் வைத்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த கண்ணன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்தயால் குத்தப்பட்ட தி.மு.க வட்ட செயலாளர் கண்ணனுக்கும் பகுதி செயலாளர் ராம்குமார் என்பவருக்கும் எட்டு மாதத்திற்கு முன்பு நடந்த தி.மு.க., மாநாட்டுக்கு வேன்களில் தொண்டர்களை அழைத்து சென்ற செலவு தொடர்பாக தகறாறு இருந்து வதந்துள்ளது. நேற்று காலை பகுதி செயலாளர் ராம்குமாரை சந்தித்த கண்ணன் வேன் வாடகைக்காக எனது நகையை அடமானம் வைத்து கொடுத்தேன். தற்போது நகை மூழ்கும் நிலையில் உள்ளது, நீங்கள் பணம் கொடுக்காமல் இன்னமும் இழுத்து அடித்தால் அமைச்சர் கே.என்.நேருவிடம் நேரில் புகார் தெரிவிப்பேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நள்ளிரவு கண்ணன் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.