• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பழனி முருகன் கோவில் குறித்த தீர்ப்பு தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். இந்திய கலாச்சார நட்புறவு கழகம் வலியுறுத்தல்.

Byகுமார்

Feb 5, 2024

மதுரையில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் தமிழ் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் செளமா ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் ராதா கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சென்னை உள்பட தென்மாவட்டங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கு உரிய நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். பழனி மலை முருகன் கோயிலில் மதசார்பின்மைக்கு எதிராக மதுரை உயர் நீதி மன்ற கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் மாநில பொருளாளர் கோட்டியப்பன் நன்றி தெரிவித்தார்.