• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விபத்தை தவிர்க்க காங்கிரஸ் பிரமுகர் சொந்த செலவில் ஹைமாஸ் விளக்கு

ByG.Suresh

Feb 3, 2024

தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுப்பதற்காக தனது சொந்த செலவில் ஹைமாஸ்க் விளக்கு அமைத்து கொடுத்த காங்கிரஸ் பிரமுகருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம், ஒக்கூரில் தேசிய நெடுஞ்சாலை நான்கு முனை சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் தனது சொந்த செலவில் ஹைமாஸ்க் விளக்கு அமைத்துக்கொடுத்த நிலையில் அவருக்கு கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கையை சேர்ந்தவர் ஜெயசிம்மன், இவர் காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருமான சுதர்சன நாச்சியப்பனின் மகனாவார். இவர் தேசிய குழு உறுப்பினராக உள்ளதுடன் வழக்கறிஞராக பணிபுரிந்துவரும் சூழலில் அவ்வப்போது சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அவர்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமது சொந்த செலவில் செய்து வருகிறார். இந்நிலையில் ஒக்கூர் கிராமத்தில் கீழப்பூங்குடி, செல்லும் சாலை பிரியும் இடத்தில் உள்ள நான்கு முனை சாலையில் அதிகமாக இருள் மூழ்கி காணப்படுவதால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலிகளும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அந்த 4 சாலை சந்திப்பில் ஹைமாஸ்க் விளக்கு அமைக்க கோரிக்கைவிடுத்துவந்தனர். இந்த நிலையில் அன்மையில் கார் ஒன்று விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இந்த தகவல், காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் மூலம் ஹெய்சிம்மனுக்கு கிடைக்கவே ஹைமாஸ்க் விளக்கு அமைக்கும் ஒமேகா சிஸ்டம் நிறுவனத்தின் மூலம் சுமார் ரூபாய் 3 லட்சம் செலவில் அங்கு அவற்றை அமைத்து கொடுத்து, நேற்று பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தார்.
இந்நிகழ்ச்சியினை ஒமேகா சிஸ்டர் கண்ணன் ஏற்பாடு செய்திருந்தார் இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து விழா நடத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.