

சிவகங்கை மூணாவது புத்தகத் திருவிழாவில் ஐந்தாம் நாள் நிகழ்வில் எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய பராமரிப்பு என்ற நூலை தன்னம்பிக்கை பேச்சாளர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா வெளியிட, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். படத்தில் பேச்சாளர் பூஜிதா மற்றும் திருப்பதி ராஜன் எழுத்தாளர் ஈஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.
ஐந்தாம் நாள் நிகழ்வை முதல் முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நாளைய சமுதாயம் நல்ல சமுதாயம் என்ற தலைப்பில் செல்வி பூஜிதா உரையாற்றினார். புத்தகம் என்னும் போதிமரம் என்ற தலைப்பில் டாக்டர் பர்வீன் சுல்தானா அவர்கள் உரையாற்றினார்கள். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சம்பத்குமார் அவர்கள் நன்றி கூறினார்.

