• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிப்.19ல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

Byவிஷா

Feb 3, 2024

தமிழக சட்டப்பேரவை வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 2024 – 25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, பிப்ரவரி 19 அன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் வருகின்ற பிப்ரவரி 12ஆம்தேதி திங்கட்கிழமை, காலை 10 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடுகிறது. தமிழ்நாடு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அதைத் தொடர்ந்து, 2024-2025ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, பிப்ரவரி 19ம் தேதி அன்று திங்கட்கிழமை, காலை 10 மணிக்கு பேரவையில் நிதியமைச்சரால் வாசிக்கப்படும்.
மேலும், 2024-2025 ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், 2024ம் ஆண்டு பிப்ரவரி 20ம்தேதி, செவ்வாய்க்கிழமை அன்றும், 2023-2024- ஆண்டின். கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி), 2024ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி புதன்கிழமை அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும் இந்தக்கூட்டத்தொடர் முடிந்தபின் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால், அதன்பின் மார்ச் முதல் வாரத்தில் ஒரு கூட்டத்தொடர் இருக்கும் என்றும் அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர்தான் கூட்டத்தொடர் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது, கடந்தமுறையை விட ஆளுநர் மீதான அதிருப்தி அதிகமாக இருப்பதால் இம்முறை அனைவரின் கவனத்தையும் பெறுவதாக இந்தக் கூட்டத் தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.