• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Feb 1, 2024

1. இரு இதயங்களின் காதல் ஒரு தெய்வீக தன்மையை உருவாக்குகிறது.

2. பெண்ணைப் பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள், பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி.

3. கோடையில் வியர்வை சிந்தாதவன், குளிர்காலத்தில் உறைந்துபோக கற்றுக்கொள்ள வேண்டும்.

4. நண்பர்களை பெற்றிருக்கும் யாரும் பயனில்லாத மனிதனில்லை.

5. உங்களை நீங்களே மதிப்பது ஆணவம். பிறர் உங்களை மதிப்பது பெருமை!

6. சந்தேகம், கோழையின் குணம்.

7. சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.

8. சில சமயங்களில் இழப்பதுதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

9. ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள்.

10. நீங்கள் அசாதாரணமான ஒரு செயலுக்குத் தயாராகவில்லை என்றால், சாதாரண நிலையிலேயே இருந்துவிட வேண்டியதுதான்.