• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

மதுரையில் திருஞானம் நடுநிலைப்பள்ளியில் 1980 முதல் 1989 வரை படித்த மாணவர்கள் இணைதல் விழா

Byகுமார்

Jan 29, 2024

மதுரையில் திருஞானம் நடுநிலைப்பள்ளியில்1980 முதல் 1989 வரை படித்த மாணவர்கள் இணைதல் விழா நடைபெற்றது.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில், காமராஜர் சாலையில் உள்ள திருஞானம் நடுநிலைப் பள்ளியில் 1980 – 1989 ஆம் ஆண்டு வரை படித்த பழைய மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைதல் விழா நடைபெற்றது, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் டீன் சந்திரன் மற்றும் திருஞானம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர், இணைந்த முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி கால பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர், தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், நினைவு பரிசுகள் வழங்கியும் கௌரவித்தனர். முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களது ஆசிரியருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். குடும்பத்தாருடன் விளையாடி தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த இணைதல் விழாவிற்கான ஏற்பாட்டினை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் கார்த்திகேயன் செய்திருந்தார்.