• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அயோத்தி ராமர் கோவில் ஆரத்தி, தரிசன நேர அட்டவணைகள் வெளியீடு..!

Byவிஷா

Jan 27, 2024

அயோத்தி ராமர் கோவில், திருப்பதிக்கு போட்டியாக இருப்பதாக பக்தர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் ஆரத்தி மற்றும் தரிசன நேர அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் உலகம் முழுவதும் இருந்து 8000 விவிஐபிக்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நாளில் பக்தர்கள், பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. அடுத்த நாள் முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தினசரி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ராம பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அங்கு 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயோத்தியின் அடையாளமாக மாறிவிட்ட ராமர் கோவில் திருப்பதிக்கு போட்டியாக இருப்பதாக பக்தர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் ஆரத்தி, தரிசனத்திற்கான நேர அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி காலை 4.30 மணிக்கு ஸ்ரீநகர் ஆரத்தியும், 6.30 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் பக்தர்களுக்கான தரிசன நேரம் தொடங்கும். அதே போல் பிற்பகலில் போக் ஆரத்தியும், மாலை 7.30 மணிக்கு மாலை நேர ஆரத்தியும், 8 மணிக்கு 2வது போக் ஆரத்தியும் நடைபெறும். அதன் பின்னர் இரவு 10 மணிக்கு நடைபெறும் ஷயான் ஆரத்தியுடன் தினசரி பூஜைகள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.