• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி திருமுருகன் திருக்கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

ByP.Thangapandi

Jan 25, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் திருக்கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருமுருகன் திருக்கோவிலில் முருகனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம், நெய், தேன் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.

இந்த தைப்பூச விழாவில் உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்., இதில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.