• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தைப்பூசம், விடுமுறை தினங்கள்-கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

BySeenu

Jan 23, 2024

தைப்பூசம், விடுமுறை தினங்களை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோவை அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தைப்பூசம், குடியரசு தின விழா மற்றும் வார இறுதி நாட்களான 25 – ந் தேதி முதல் 28 ந் தேதி வரை கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து மருதமலை, பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு செல்லவும், மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.