• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை..!

Byவிஷா

Jan 23, 2024

தமிழகத்தில் ஜன.25 தைப்பூசம், 26 குடியரசுதினம் அதைத்தொடர்ந்து வாரவிடுமுறை நாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
பொங்கல் பண்டிகை முடிந்து கடந்த 18ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் திறந்தன. இந்த நிலையில், தைப்பூச திருவிழா வரும் 25ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 26ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் இந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறையாகும். அதே போல் 27ஆம் தேதி 4வது சனிக்கிழமை என்பதால் பொதுவிடுமுறை நாளாக உள்ளது.
இந்த நிலையில், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை உள்ளதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.