• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா – கோவையில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி…

BySeenu

Jan 22, 2024

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக கோவையில் கோயம்புத்தூர் பஞ்சாபி கூட்டமைப்பு சார்பில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் பாடும் நிகழ்ச்சி துவங்கி உள்ளது கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் உள்ள பஞ்சாபி அசோசியேசன் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராம பெருமான் சீதை மற்றும் லட்சுமனன்,அனுமாருடன் இருக்கும் உருவப்படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ராமயண புத்தகத்தை வைத்து ராமாயணம் பாடி வழிபாடு செய்தனர். மேலும் பெண்கள் ஒன்று கூடி ராமாயண பதிகம் பாடியும் தாண்டியா நடனம் ஆடியும் மகிழ்ந்தனர்.இன்று பகல் 12 மணிக்கு துவங்கியுள்ள இந்த ராமாயணம் பாடும் நிகழ்ச்சியானது நாளை பகல் 12 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.