• Thu. Mar 27th, 2025

கோவை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்…

BySeenu

Jan 22, 2024

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

இறுதி வாக்காளர் பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 906 ஆண்களும், 15 லட்சத்து 71 ஆயிரத்து 93 பெண்களும் மூன்றாம் பாலினத்தவர் 595 பேர் என மொத்தம் 30 லட்சத்து 81 ஆயிரத்து 596 வாக்காளர்கள் கோவையை சேர்ந்த 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 4,62,612 வாக்காளர்களும் குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 1,96,503 வாக்காளர்களும் உள்ளனர்.