• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிவகாசி பகுதிகளில் தொடர் தூறல் மழை..,

ByKalamegam Viswanathan

Jan 20, 2024

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல்மழை பெய்தது. இதனை தொடர்ந்து காலை 6 மணியில் இருந்து இடைவிடாமல் தொடர்ந்து தூறல்மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் மேக மூட்டமாக இருப்பதால் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் தூறல்மழை காரணமாக, காலை நேரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சற்று சிரமப்பட்டனர். வேலைக்குச் செல்பவர்களும் சிரமப்பட்டனர். தொடர் தூறல்மழை காரணமாக சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சிவகாசி, திருத்தங்கல், மீனம்பட்டி, பாறைப்பட்டி, அனுப்பங்குளம், சசி நகர், சித்துராஜபுரம், ரிசர்வ்லைன், சாட்சியாபுரம், விளாம்பட்டி, மாரனேரி உள்ளிட்ட பல இடங்களிலும் இன்று காலையிலிருந்து தொடர்ந்து தூறல்மழை பெய்து வருகிறது.