• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராமர் கோவில் நினைவு தபால்தலை வெளியீடு..!

Byவிஷா

Jan 19, 2024
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ராமர் கோவில் நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். 
அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக்க விழாவில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கும்பாபிஷேகத்தை முன்னிட்ட சடங்குகள் செவ்வாய்க்கிழமை முறைப்படி தொடங்கின. மைசூரை அடிப்படையாகக் கொண்ட ஸ்தபதி (சிற்பி) அருண் யோகிராஜ் வடிவமைத்த ஸ்ரீராமர் சிலைதான் பிரதிஷ்டை செய்வதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ராமர் ஆலய கும்பாபிஷேகத்துக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், துறவிகள், பிரபலங்கள் என நாடு முழுவதும் 7,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு நாடுகளிலிருந்து 100-க்கும் மேலான சிறப்பு பிரதிநிதிகளும் இதில் பங்கேற்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ராமர் கோவில் நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். அத்துடன் உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். 48 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் ஐ.நா.சபை, அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர், கனடா, கம்போடியா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகள் வெளியிட்ட தபால் தலைகளையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.