• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே விவசாய நிலத்தில் தீடீர் ஏற்பட்ட பள்ளங்கள், தொல்லியல் சார்ந்த சின்னங்களா என ஆய்வு செய்ய கோரிக்கை

ByP.Thangapandi

Jan 18, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரணன், இவரது தோட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,

2 அடி அகலத்தில் சுமார் 6 அடி பள்ளமாக உள்ள இந்த பள்ளங்களை கண்ட விவசாயி வீரணன், வருவாய்த்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.,

இந்த தகவலின் அடிப்படையில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து பள்ளம் எவ்வாறு ஏற்பட்டது., பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்ட புத்தூர் மலை அடிவார பகுதி என்பதால் பழங்கால சேமிப்பு கிடங்கா? பதுங்கு குழிகளா? என தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு செய்தால் மட்டுமே முழு விவரம் தெரிய வரும் என தெரிவித்தனர்.

மேலும் இந்த பகுதியில் ஏற்கனவே இது போன்ற தூர்ந்து போன பள்ளங்கள் காணப்பட்டதாகவும், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இந்த கிராமத்தின் அருகே உள்ள வ.கல்லுப்பட்டி கிராமத்திலும் இது போன்ற பள்ளங்கள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.