• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை..,தென்மண்டல ஐஜி நேரில் சென்று ஆய்வு..!

ByKalamegam Viswanathan

Jan 12, 2024

மதுரை மாவட்டத்தில், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் ஆய்வு செய்தார்,
மதுரை மாவட்டத்தில், பொங்கல் திருநாளையொட்டி பாலமேட்டில் 16ம் தேதியும் அலங்காநல்லூரில் 17 ம் தேதியும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐஜி நரேந்திர நாயர், டி. ஐ.ஜி ரம்யா பாரதி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதில் வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர் மாடம், காளைகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதில் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியினர் பேரூராட்சி செயல் அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.