• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்திராநகர் பகுதியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்..!

ByG.Suresh

Jan 11, 2024
இந்திரா நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பினை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ 1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு சென்னையில் இன்று முதல் கட்டமாக பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கி துவக்கி வைத்ததை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள 829 நியாய விலை கடையில் 4 லட்சத்தி 16 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 
இலவச வேட்டி, சேலை,அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ 1000 ரொக்க உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை சிவகங்கை அருகே இந்திரா நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் சிவகங்கை திமுக நகரச் செயலாளரும், நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜீனு, மற்றும்நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், மதியழகன் ,ராமதாசு, ராஜபாண்டி, சண்முகராஜன், பிரியங்கா, கீதா கார்த்தி, விஜயகுமார் பாக்கியலட்சுமி, வீரகாளை ,திமுக வட்டச் செயலாளர் ஆர்வி சேகர், ராஜா சர்புதீன், தகவல் தொழில்நுட்ப அணி சதீஷ், கார்த்தி, மகேந்திரன், சேஷாத்திரி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தி, கூட்டுறவு சங்க செயலாளர் பெரியசாமி நாகசுந்தரம், மற்றும் நியாய விலை கடை ஊழியர்கள் அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.