• Sun. May 5th, 2024

அதிமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.., சிவகங்கை நகர்மன்ற தலைவர் பேட்டி..!

ByKalamegam Viswanathan

Jan 9, 2024

ஜனவரி 12ஆம் Nதி திமுக அரசைக் கண்டித்து, அதிமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என சிவகங்கை நகர்மன்ற தலைவர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் சிவகங்கை மில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
வருகிற 12ம்தேதி அ.தி.மு.கவினர் குடிநீர் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, குப்பை கிடங்கு இடம் தொடர்பாக பல்வேறு பிரச்சினை குறித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது முற்றிலும் காழ்ப்புணர்ச்சியுடன் அரசியல் விளம்பரத்திற்காக நடத்தப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை நகராட்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதற்கான நிதியாக ரூபாய் 25 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர சுமார் 73.25லட்சத்தில் கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில் அமைத்தல், புதிதாக நகராட்சி கட்டிடம் கட்டுதல், நகரில் விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை அமைத்தல், உட்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூபாய் 73கோடியே 22லட்சத்து 90ஆயிரம் மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்திட அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சியை விரிவுபடுத்தும் வகையில் கீழவாணியண் குடி, சூரக்குளம் காஞ்சிரங்கால் ஆகிய ஊராட்சிகளை சிவகங்கை நகராட்சியுடன் இணைப்பதற்கான தீர்மானம் நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு அரசின் பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்காக அரசின் சார்பில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் .பெரிய கருப்பன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்நேரு பல்வேறு பணிகளை திட்ட பணிகளை நகராட்சிக்கு அனுமதித்து அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்கள். அதற்கான பணிகள் நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் அமைச்சராக இருந்த பொழுது சிவகங்கை அருள்மிகு கௌரிவினாயகர் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது குறித்து ஆதாரத்துடன் நான் புகார் கொடுத்ததின் பேரில் கழக ஆட்சி வந்ததும் அந்த நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இந்துசமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்டது. இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தற்பொழுது அ.தி.மு.க. இத்தகைய ஆர்ப்பாட்டத்தினை அறிவித்துள்ளார்கள்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிவகங்கை நகரில் நல்ல முறையில் நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் மக்கள் நலப்பணிகளில் செயலாற்றி வரும் நகராட்சி நிர்வாகத்தை குறைகூற முடியாததால் சுயலாபத்திற்காக ஆர்ப்பாட்டம் என்று அறிவித்துள்ளார்கள். இது முற்றிலும் அரசியல் காழ்ப்ப்புணர்ச் சிக்காக அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டமாகும். குடிநீர் மாதம் கட்டண உயர்வு என்று குறிப்பிட்டுள் ளார்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது அப்போதைய ஆணையால் குடிநீர் கட்டணம் உயர்த்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் குடிநீர் கட்டண வைப்பு தொகை ரூபாய் 5ஆயிரத்திலிருந்து ரூபாய் 6000 வகையிலும், வீட்டு உபயோகத்திற்கு மாதம் ரூபாய் 100லிருந்து 200என்றும், வணிக உபயோகத்திற்கு மாதம் ரூபாய் 255லிருந்து 400என்றும், தொழிற்சாலைக்கு ருபாய் 255லிருந்து 600என்று உயர்த்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசின் பரிசிலனையிலிருந்து அரசின் அறிவிப்பினால் வீட்டு உபயோக குடிநீர் கட்டனம் மாதம் கட்டணம் ரவுப் 200என்றும், வணிக உபயோகத்திற்கு ருபாய்255லி ருந்து ருபாய் 300ஆகமட்டும் உயர்த்தப்பட்டது. இது தவிர வருடம் தோறும் ஏப்ரல் மாதம் முதல் 5 சதவீதம் குடிநீர் கட்டணம் உயர்த்த வேண்டும் என்று அப்போதைய அ.தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
நகர் மக்களின் சூழ்நிலை கருதி குடிநீர் கட்டண உயர்வுகளை சிவகங்கை நகர் மன்றம் நிறைவேற்ற வில்லை. இது தவிர 2017 ஆம் ஆண்டு முதல் காவிரி குடிநீர் கூட்டுதிட்டத்திற்கு 3கோடியே 36 ஆயிரத்து 845 58 ரூபாய் பாக்கி வைத்து சென்றனர். இதை புதிய நகர்மன்றம் இரண்டரை ஆண்டுகளில் இரண்டு தவணைகளில் ரூபாய் ஒரு கோடி பாக்கி பணத்தினை செலுத்தி உள்ளோம். சிவகங்கை நகரில் குடிநீர் கட்டணம் அதிக அளவில் ரூபாய் 1கோடியே 33 லட்சம் பாக்கி உள்ளது. அவர்களிடம் இருந்து வசூலிப்பதற்காக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர இடைக்காட்டுர் குடிநீர் திட்டத்திற்காக ஆண்டிற்கு ருபாய் 4கோடியே 93லட்சத்து 90 ஆயிரத்து 636 செலுத்த இதில்குடிநீர் பராமரிப்பு பணியாளர்கள் சம்பளம் மின்கட்டணம் உட்பட பல்வேறு வகைகளில் செலவழிக்கப்படுகிறது. குப்பை கிடங்கிற்கு மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து வலியுறுத்தி கூட்டுறவு அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் மூலம் இடம் தேர்வு செய்துதருமாறு மாவட்ட ஆட்சியர் சிவகங்கை வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். சிவகங்கை வட்டாட்சியரும் நகர் மற்றும் சுற்றுப்புற இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விரைவில் குப்பை கிடங்கிற்கான இடம் தேர்வு செய்யப்படும். எனவே இத்தகைய நிலையில் அ.தி.மு.க.ஆட்சியில் குடிநீர் கட்டண உயர்வினை நிறைவேற்றியவர்கள் இதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் அவர்கள் காலத்தில் ஏற்பட்டதாகும். 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. அமைச்சராக இருந்த பாஸ்கரன் அல்லது அ.தி.மு.கவினரோ சிவகங்கை நகருக்கு உருப்படியான பெயர் சொல்லும் வகையில் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப் படவில்லை. தற்பொழுது கழக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் மாவட்ட தலைநகருக்கு கிடைக்கும் அந்தஸ்தினை பொறுத்து கொள்ளமுடிய வில்லை. அரசியல் சுயலாபத்திற்காக வேண்டுமென்று இத்தகைய ஆர்ப்பாட்டத்தினை நடத்துகிறார்கள்
எனவே இந்த ஆர்ப்பாட்டத்தினை சிவகங்கை நகர் மக்கள் பொருட் படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு துரைஆனந்த் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *