• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகபொங்கல் கொண்டாடிய பள்ளி மாணவ, மாணவிகள்..!

ByG.Suresh

Jan 12, 2024

சிவகங்கையில் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக வேஷ்டி சட்டையுடன் சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாணவிகள் பொங்கல் விழா கொண்டாடினர்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது பொங்கல் விழாவில் பசு மாடு மற்றும் கன்று குட்டிகளுடன் மாணவர்கள் பாரம்பரிய வேஷ்டி சட்டையுடனும் கலந்துகொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினர். மாணவரும் மாணவிகளும் பொங்கலோ பொங்கல் என்று பொங்கல் பொங்கி வர பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதில் மாணவர் மாணவிகளுடன் பள்ளி தாளாளர் சேகர் கலந்துகொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினர். பாரம்பரியத்தை பள்ளி குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டும் விதமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பள்ளி தாளாளரை வெகுவாக குழந்தையின் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.