• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

குமரி சாமிதோப்பு அன்பு வனத்தில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா..!

பிரிட்டிஷ் ஆட்சியின் போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் உள்ள வைக்கம் ஊரில் உள்ள மகாதேவர் ஆலையத்தின் திருவிழா காலத்தில், கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் உயர் சாதியினர் மட்டுமே பயன் படுத்த முடியும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் நடமாடக்கூடது என்ற வன் கொடுமையை எதிர்த்து.அன்று குஞ்சப்பாபுலையன் என்பவர் தலைமையில் தீண்டாமைக் எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்ந்த நிலையில்.அன்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியாரை வைக்கம் போராட்டத்தில் பங்கேற்க வைக்கம் பகுதியில் இருந்து அழைப்பு விடுத்தனர்.

தந்தையே பெரியார் போராட்டத்திற்கு போன நிலையில். அங்கு நடந்த ஆச்சரியமான நிகழ்வு. திருவிதாங்கூர் மன்னர் குடும்பம், தந்தை பெரியாருக்கு மிகப் பெரிய வரவேற்பு கொடுத்ததாம். இதற்கு காரணம் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்திற்கும், பெரியாருக்கும் இருந்த பாரம்பரிய நட்புறவு.

தந்தை பெரியார் நான் வந்திருப்பது.வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயில் வீதிகளில் தாழ்ந்த சாதிய மக்கள் நடப்பதற்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து போராட்டத்திற்கு வந்துள்ளேன் என தெரிவித்து. வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றார்.

திருவிதாங்கூர் காவல் துறை தந்தை பெரியாரை கைது செய்து தீவு போன்ற பகுதியான அறியகுத்தி என்ற இடத்தில் சிறை வைத்தது.

தந்தை பெரியார் கைது செய்தி,அய்யாவின் வாழ்க்கை துணைவி நாகம்மாளுக்கு தெரிய வர. நாகம்மாளும், தந்தை பெரியாரின் தங்கை கண்ணம்மாவும் வைக்கம் வந்து போராட்டத்தில் பங்கு பெற்றதும், தமிழகத்தின் ஈரோடு பகுதியை சேர்ந்த தந்தை பெரியார் அவரது மனைவி,தங்கை சாதிய கொடுமையை எதிர்த்து அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் போராட்டம் என்பது ஒரு புதிய வரலாற்றை மலையாளம் பேசும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதின் விளைவு.

வைக்கத்தில் தந்தை பெரியாருக்கு சிலை, தந்தை பெரியார் பெயரில் வளைவு எல்லாம் அந்த மக்கள் உருவாக்கியுள்ளனர். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா அண்மையில் வைக்கத்தில் நடைபெற்றபோது.கேரள முதல்வர் பிரணராய் விஜயன் அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அந்த விழாவில் பங்கேற்றார்.

சென்னையில் வாழும் கேரள மக்களின் கேரள சமாஜம் சார்பில் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா பெரிய அளவில் கொண்டாட நடந்த ஏற்பாடு. தே மு தி க நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மரணம் காரணமாக.சென்னை பெரியார் திடலுக்கு மாற்றப்பட்டு, எளிய முறையில் நடந்த விழாவில் கேரள முதல்வர் பிரணராய் விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலின், திராவிட கழக செயலாளர் ஆசிரியர் வீரமணி ஆகியோர் பங்கேற்ற தகவல்களை.

குமரி மாவட்டம் சாமிதோப்பு அன்பு வனத்தில்.அய்யாவழி பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில்.ம.தி.மு.க.,வின் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன் அவரது உறையில் வெளிப்படுத்தினார்.

நிகழ்வில் ம தி மு க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.வெற்றிவேல், பால சுப்பிரமணியம், ராணி செல்வின், ராஜ்குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றனர்.