கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம் பி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், மாநகர ஆணையாளர் ஆனந்தமோகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட வாழை, தென்னை. ரப்பர் போன்ற நெற்பயிர்களை கணக்கெடுத்து அந்தந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் மற்றும் குளங்களை தூர்வார வேண்டும் என அரசு அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.