• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவையில் மகளிர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் – எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி தலைவர் கோமளவல்லி

BySeenu

Jan 1, 2024

வாசம் பில்டர்ஸ் நிறுவனத்தின் 10ம் ஆண்டு துவக்க விழா, எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஒரக்கல்பாளையம் சூரியா கார்டனில் இந்த நிறுவனத்தின் நிறுவனத்தலைவர் அயினிக்கல் சசி தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி, சமூக ஆர்வலர் மற்றும் தொழிலதிபர் ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.
அப்போது பேசிய எஸ்.எஸ் குளம் பேரூராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த வாசம் பில்டர்ஸ் நிறுவனத்தலைவர் அயினிக்கல் சசி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 10 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வாசம் பில்டர்ஸ் நிறுவனம் மிக நல்ல முறையில் வளர்ச்சி அடைந்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதியாக அமல் அயினிக்கல் நன்றி உரை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.