• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை தகுதித்தேர்வு முடிவு வெளியீடு..!

Byவிஷா

Dec 30, 2023

தமிழகத்தில் இந்த வருடம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட, முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டதில், தற்போது அத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சி திறனை வளர்ப்பதற்கும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கான தகுதி தேர்வு இந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்காக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழுநேர ஆராய்ச்சி படிப்புக்காக நிதி உதவி அளிக்கும் வகையில் தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 17ஆம் தேதி தகுதி தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த தேர்வு எழுதிய 2311 தேர்தலின் முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும், தகுதியான தேர்வர்களை தேர்வு செய்யும் பணிகளை உயர்கல்வித்துறை மேற்கொள்ளும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.