• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு : பிரசாந்த் கிஷோர்..!

Byவிஷா

Dec 29, 2023

வரும் 2024 மக்களவைத் தேர்தலில், சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம் என பிரசாந்த்கிஷோர் தெரிவித்துள்ளார்.
பல மாநிலங்களில் அரசியல் மாற்றம் வருவதற்குக் காரணமாக இருந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் தற்போது, பிகார் மாநில அரசியலில் புத்துயிர் ஊட்டும் வகையில் “ஜன் சூரஜ் யாத்ரா” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதன்மூலம் மக்களின் பிரச்சினைகளை கண்டறிவது, அவர்களின் எதிர்பார்ப்பை அறிந்து கொள்வது, தனது அரசியல் பாதைக்கு வலுவூட்டுவது எனப் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
முன்னதாக பஞ்சாப் முதல் தமிழ்நாடு வரை ஏராளமான மாநிலங்களில் அரசியல் மாற்றம் வருவதற்கு பல்வேறு கட்சிகளுடன் பயணித்திருக்கிறார். அதில் 90 சதவீதம் வெற்றியையும் பெற்று தந்துள்ளார். இவரது ஐபேக் எனப்படும் அரசியல் வியூக கார்ப்பரேட் நிறுவனம் தேசிய அளவில் மிகவும் பிரபலம். இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறி தான் பிகார் பக்கம் ஒதுங்கியிருக்கிறார். அங்கு தனது நடைபயணத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவற்றை சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,
தனது ‘ஜன் சூரஜ் யாத்ரா’ பயணத்தின் செயல் திட்டங்கள் உடன் ஒத்துப் போகும் நபர்கள் சுயேட்சையாக வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பினால் அவர்களுக்கு நாங்கள் ஆதரவுக் கரம் நீட்டுவோம். அதேசமயம் எங்களின் ஜன் சூரஜ் யாத்ரா பேனரின் கீழ் தேர்தலில் யாரும் போட்டியிட முடியாது. நாங்கள் ஒன்றும் அரசியல் கட்சி தொடங்கவில்லை. இது வெறும் பயணம் மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.