• Thu. Jul 16th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்…..

ByKalamegam Viswanathan

Dec 16, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். சிவகாசியில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பு மற்றும் ஆஸ்கர் இன்ஸ்ட்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட் கல்லூரி சார்பில், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். சிவகாசி பேருந்து நிலையப் பகுதிகள், ஜவுளிக்கடை வீதி, புது ரோட்டுத் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், துணை மேயர் விக்னேஷ்பிரியா, மாமன்ற உறுப்பினர்கள் சேவுகன், தனலட்சுமி, கல்லூரி மேலாளர் தேவேந்திரன், நிர்வாகிகள் வினோத்குமார், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.