• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருநகரில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு..,ஆதரவற்றோர் மையத்தில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..!

ByKalamegam Viswanathan

Dec 12, 2023

திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் மையத்தில் முதியோருக்கு தலையணை, போர்வை, உணவு போன்றவற்ற ரஜினி ரசிகர்கள் வழங்கினர்.
திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் உள்ள நகர்ப்புற ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர் மன்றம் சார்பில்மாவட்டத் தலைவர் பால தம்புராஜ் , முன்னாள் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமரவேல், மாவட்ட செயலாளர் அழகர்,திருப்பரங்குன்றம் நகர செயலாளர் கோல்டன் சரவணன், அவனி பாலா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டு திருநகரில் உள்ள நகர்ப்புற ஆதரவற்றோர் மையத்தில் 127 பேருக்குநடிகர் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தலையணை போர்வை உணவு வழங்கினர்.