• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் மகாகவி பாரதி பிறந்த நாளை முன்னிட்டு..,மாபெரும் புத்தக கண்காட்சி துவக்கம்..!

ByP.Thangapandi

Dec 12, 2023

உசிலம்பட்டியில், மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் புத்தக கண்காட்சியை உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிட வளாகத்தில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது ஆண்டாக புத்தக கண்காட்சி இன்று துவக்கியுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தலைப்புகளில், கல்கி, இறையன்பு, தா.பாண்டியன், சு.வெங்கடேசன், தொ.பரமசிவன், செ.தி.ஞானகுரு என பல எழுத்தாளர்களின் படைப்புகளில் வெளியான புத்தகங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு வகையில் 100 புத்தகங்களை வாங்கி புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார்.