• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திருமங்கலத்தில் வெறி பிடித்து அலையும் நாய்கள்… அச்சத்தில் மக்கள்..,

ByKalamegam Viswanathan

Dec 5, 2023

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பகுதிகளான PCM நகர், அசோக் நகர், சோணை மீனா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பகல் நேரங்களிலும் கும்பல், கும்பலாக நாய்கள் சுற்றிவருவதால், பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் வெளியில் நடமாட பீதி அடைந்துள்ளனர். இதனால் PCM நகரைச் சேர்ந்த ராஜசுதா (32) என்ற பெண் நாய்களை துரத்த கல்லை எறிந்தார். ஆனால் நாய்க்கு சொந்தமானவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இருவரிடையே வாக்குவாதம் முற்றியதால், ராஜசுதா கல்லால் அடித்து தாக்கப்பட்டார். காயமுற்ற ராஜசுதா தலையில் பலத்த காயத்துடன் TM GH – ல் அனுமதி.
நாய்களை அப்புறப்படுத்த TM நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.