• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அமமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..,

ByKalamegam Viswanathan

Dec 5, 2023

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வாடிப்பட்டி ஒன்றியம் சார்பில் காடுபட்டி கிராமத்தில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன் ஒன்றிய துணை செயலாளர் மீனாட்சி சுந்தரம் மாவட்ட நிர்வாகிகள் வீரமாரி பாண்டியன் முனைவர் பாலு சோழவந்தான் பேரூர் செயலாளர் திரவியம் முன்னிலை வகித்தனர் கிளைச் செயலாளர்கள் செல்லம் ,பரமன் வரவேற்றனர். நிகழ்வில் பால்பாண்டி ராமுத்தாய், தேவர், முருகேசன் தமிழரசன் கருப்பசாமி காமுத்தாய் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.