• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் BSNL அலுவலகத்தில் தொலைத் தொடர்பு ஆலோசனைக் கூட்டம்…

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு விஜய்வசந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு BSNL பொதுமேலாளர் திரு. பிஜி பிரதாப் அவர்கள் முன்னிலை வகித்தார். தொலை தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பொதுமேலாளர் அவர்கள் நாகர்கோவில் மாவட்டம், கண்ணாடி இழை இணையவழி சேவையில் தமிழகத்தில் முதலிடம் வகுப்பதையும், 4G செயலாக்க திட்டங்கள் பற்றியும், BSNL இன் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்கள். இது வரை எந்த தொலை தொடர்பு நிறுவனமும் சேவை கொடுக்காத 14 கிராம பகுதகளில் விரைவில் BSNL சேவை வழங்க இருக்கிறது.
இந்த கூட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அந்தோணி ராஜேஷ், துரை, பால்ராஜ், ஜோசப்ராஜ், ஆரோக்கியராஜன் மற்றும் அன்பழகன், துணை பொது மேலாளர்கள் ராமச்சந்திரகுமார், சுதீர், கணக்கியல் ஆலோசகர் ( Internal Finance Advisor ) சஜீவன், உதவி பொது மேலாளர்கள் விஜயன், மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.